செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
நடிகை கங்கனா ரணாவத்தின் மனநிலையைப் பரிசோதிக்க வேண்டும்!
‘நடிகை கங்கனாவின் மனநிலையைப் பரிசோதிக்க வேண்டும்’ என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
நடிகை கங்கனா ரணாவத்தின் மனநிலையைப் பரிசோதிக்க வேண்டும்!
Posted : வெள்ளிக்கிழமை, நவம்பர் 12 , 2021 14:25:28 IST
‘நடிகை கங்கனாவின் மனநிலையைப் பரிசோதிக்க வேண்டும்’ என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
ஹிந்தியில் மிக முக்கிய நடிகையாக இருக்கும் கங்கனா தன்னுடைய அரசியல் கருத்துகளால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
சமீபத்தில் அவருக்கு ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது. இதற்கடுத்து, தனியார் ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த நேர்காணலில் ‘இந்தியா 2014-ஆம் ஆண்டு மோடி பிரதமரான போதுதான் உண்மையில் சுதந்திரம் அடைந்தது. 1947-ல் கிடைத்தது பிச்சை’ எனத் தெரிவித்தார். இக்கருத்து வேகமாக இணையத்தில் வைரலாகத் தொடங்கிய நிலையில் பல்வேறு கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் கங்கனாவிற்கு எதிரான கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த் சர்மா, ‘கங்கனாவின் மனநிலையைப் பரிசோதிக்க வேண்டும். உண்மையாக சுதந்திரத்திற்குப் போராடியவர்களைத் தன் அரசியல் லாபத்திற்காக சிறுமைப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவருடைய ‘பத்ம ஸ்ரீ’ விருதைத் திரும்பப் பெற வேண்டும்’ எனத் தெரிவித்திருக்கிறார்.
ஆம் ஆத்மி சார்பில் டெல்லியில் கங்கனாவின் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
|