அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக நாடுகளில் ஆராய்ச்சிப் பணியும் வாய்ப்புகளும்- -முனைவர் விஜய் அசோகன், ஆராய்ச்சியாளர், அயர்லாந்து 0 கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கய்ய நாயுடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்! 0 செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல! - மக்கள் நீதி மய்யம்! 0 தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை! 0 தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 வாய்தா: திரைப்பட விமர்சனம்! 0 பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 0 "வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்" – எச்சரித்த நீதிமன்றம்! 0 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! 0 அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நடனக் கலைஞர் பிர்ஜு மகாராஜ் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்!

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   17 , 2022  13:59:28 IST

புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞரான பிர்ஜூ மகாராஜ் இன்று காலமானார். அவருக்கு வயது 83.

டெல்லியில் உள்ள தனது வீட்டில் பேரப்பிள்ளைகளுடன் நேற்றிரவு விளையாடிக் கொண்டிருந்த பிர்ஜூ மகாராஜ் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பிர்ஜூ மகாராஜ் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.

பிர்ஜூ மகாராஜ் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கதக் நடனக் கலைஞரான பிர்ஜூ மகாராஜ் மறைவுக்கு கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஈடு இணையற்ற நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைந்தார்.ஓர் ஏகலைவனைப் போல பல்லாண்டுகள் தொலைவிலிருந்து அவதானித்தும்,விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம்.இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, ‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’என பதிவிட்டுள்ளார்.



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...