மத்திய, மாநில அரசு சின்னங்களை தவறாகப் பயன்படுத்தினால் நடவடிக்கை!
Posted : வியாழக்கிழமை, ஜனவரி 20 , 2022 19:46:35 IST
மத்திய, மாநில அரசு சின்னங்களை தவறாகப் பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.
பதவியில் இல்லாத முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் அரசு சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாது எனவும் மீறிப் பயன்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி தெரிவித்துள்ளார்.
மேலும், ஓய்வுபெற்ற நீதிபதிகள், அதிகாரிகள் தங்களின் வாகனம், விசிட்டிங் கார்டுகள், லெட்டர் பேட்களில் அரசு சின்னங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் சட்டங்கள் மீறப்படும்போது சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் பொது மக்கள் புகாரளிக்கலாம் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.