அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்! 0 360 டிகிரி எப்படி இருக்கும் தெரியுமா? அண்ணாமலைக்கு பாடம் எடுத்த பிடிஆர்! 0 பிரதமரிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது? சேகர்பாபு விளக்கம் 0 சபாநாயகருக்கு கார்த்திக் சிதம்பரம் கடிதம்: நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறியதாக குற்றச்சாட்டு 0 சர்வதேச புக்கர் விருதை பெற்ற முதல் இந்திய எழுத்தாளர்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 13: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்! 0 மாநிலங்களைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் 0 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள கன்னட படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு! 0 மசூதிகள் கட்டுவதற்கு 36,000 இந்துக் கோயில்கள் இடிப்பு – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு! 0 சேத்துமான்: திரைவிமர்சனம்! 0 விஷமக்காரன்: திரைவிமர்சனம்! 0 குட்கா, புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இலங்கை மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் பாடல்! - இயக்குநர் டி.ராஜேந்தர் குரலில் வெளியானது!

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   25 , 2022  16:36:35 IST

இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில்,  அவர்களின் வலியை வெளிப்படுத்தும் விதமாக ‘நாங்க வாழனுமா சாகனுமா சொல்லுங்க’ எனும் நெஞ்சை உருக வைக்கும் பாடல் இலங்கை கவிஞர் அஷ்மின் எழுத்தில், இசையமைப்பாளர் ஜே.சமீல் இசையில் இயக்குநர்  டி.ராஜேந்தர் குரலில் வெளியாகியுள்ளது. 
 
இது குறித்து நடைபெற்ற பத்திரிகை சந்திப்பில் இயக்குநர் டி.ராஜேந்தர் கூறியதாவது, “இலங்கை மக்களுக்காக அங்கு அவர்கள் படும் கஷ்டத்திற்காக இந்தியா 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கி உதவியுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு நன்றி. இந்த நிலையில்  இலங்கையில் பெரும் போராட்டம் நடந்து வருகிறது. அந்த போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில், இலங்கை கவிஞர் அஷ்மின் உடன் இணைந்து, இசையமைப்பாளர் ஜே.சமீல் இசையில்,  உருவான பாடலை நான் பாடியிருக்கிறேன். 
 
“நாங்க வாழனுமா சாகனுமா சொல்லுங்க நீங்க சொல்லுங்க”
 
என்ற பாடலை பாடியுள்ளேன். இலங்கையில் போராடும் மக்களின் படும் அவஸ்தையை, வலியை வெளிப்படுத்தும் விதமாகவே இந்தப்பாடலைப் பாடியுள்ளேன். 
 
தமிழ் இலக்கியவாதி அஷ்மின், தமிழ் சினிமாவில் பாடல்கள் எழுதியவர். அவருக்கும் எனக்கும் நெடுங்காலமாக நட்பு உள்ளது. அவர் எழுதியுள்ள இந்தப்பாடலை நான் பாட வேண்டும் என்றார். எனவே, இலங்கை மக்கள் படும் பாடு உலகம் முழுக்க தெரிய வேண்டும் என்றே இந்த பாடலை பாடியுள்ளேன். இலங்கை மக்கள் படும் துயரம் நீங்க வேண்டும். இதனை உங்களிடம் தெரிவிக்கவே உங்களை சந்தித்தேன். 
 
முல்லிவாய்க்கால கொடுமைக்கும், இலங்கை தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைக்குமான பதிலடியை  ராஜபக்சே தற்போது அனுபவித்து வருகிறார். கர்மா எப்போதும் விடாது. என் தமிழ் மக்களுக்கு, இலங்கை மக்களுக்கு உலகம் உதவ வேண்டும். இந்த பாடலை அனைவரும் பகிர வேண்டும் பரப்ப வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 


 

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...