அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு நடப்பாண்டிலேயே அமல்!

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   29 , 2021  16:45:13 IST

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு நடப்பாண்டிலேயே வழங்கப்படும் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

இந்தியாவில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 50 சதவீதம் அகில இந்திய தொகுப்புக்கு மத்திய அரசால் பெறப்படுகிறது. இப்படிப்புகளுக்கான இடங்களை நிரப்பும்போது, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (ஓபிசி) அகில இந்திய ஒதுக்கீடான 27 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
 

ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இருப்பினும், பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை மட்டும் ஒன்றிய அரசு பின்பற்றியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.


இதையடுத்து, மருத்துவ மேற்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி அதிமுக, திமுக, பாமக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட்டுகள், காங்கிரஸ் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க அறிவுறுத்தியது.


அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் மீதான தீர்ப்பு கடந்த ஆண்டில் வழங்கப்பட்டது. அதில், மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீடு கோர உரிமை உள்ளது என்று உத்தரவிட்டது. மருத்துவ கவுன்சில் விதிகளில் மாநில இடஒதுக்கீடு பின்பற்றக் கூடாது என எந்த விதிகளும் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.


உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபோது, ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு பின்பற்றாமல் இருந்தது. இதையடுத்து, திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. இந்த நிலையில், மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டையும், பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டையும் நடப்பாண்டிலேயே வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது.


அதன்படி, ஒன்றிய அரசால் மருத்துவப் படிப்புகளுக்குப் பெறப்படும் தொகுப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டில், இளங்கலை, முதுகலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், பிடிஎஸ், எம்டிஎஸ் ஆகிய படிப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டு (2021-22) முதல் மேற்கண்ட இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் என ஒன்றி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...