???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஸ்டாலின் உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு 0 பூரணசுந்தரிக்கு பணி மறுத்திருப்பது இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கே முரணானது: ஸ்டாலின் கண்டனம் 0 லக்கேஜ் டிரான்ஸ்போட்டுக்கு ‘பேக்ஸ் ஆன் வீல்ஸ்’. ரயில் பயணிகளுக்கான புதிய திட்டம் 0 பெண்கள் திருமண வயதை உயர்த்துவதை எதிர்த்து, முஸ்லீம் பெண்கள் அமைப்பு பிரதமருக்கு கடிதம் 0 வாழ்வா? சாவா? போட்டியில் சென்னை படுதோல்வி! 0 பீகார் தேர்தல்: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி 0 மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி கடிதம் 0 ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு 0 "இந்த ஆண்டு எங்களுக்கானது இல்லை…" தோல்வி குறித்து தோனி பேட்டி! 0 கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 சிறுமிகள் மீட்பு 0 சூரரைப்போற்று ரிலீஸ் தள்ளிவைப்பு! 0 "இந்தியா அசுத்தமானது" விவாதத்தில் டொனால்டு டிரம்ப் 0 மருந்தை இலவசமாகக் கொடுக்கவேண்டியது அரசின் கடமை, சலுகையல்ல: மு.க ஸ்டாலின் 0 விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்: இலங்கை அரசு மேல்முறையீடு 0 புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல: தமிழக அரசு கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

“அனுபவத்தின் மண்ணிலிருந்துதான் முளைவிடுகிறது தமிழ்க் கவிதை” - கவிதையின் கால் தடங்கள்-2 - செல்வராஜ் ஜெகதீசன்

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   21 , 2013  07:12:24 ISTஇன்றைய கவிதைகள்
# சுகுமாரன்


“இன்று எழுதப்படும் பெரும்பான்மையான கவிதைகள் அனுபவத்தின் ஈரமில்லாதவை. ஒரு நிகழ்வின் அல்லது ஒரு சொல்லின் அடுக்குகள், போலியான ஜென் மனநிலை, இழந்த காலத்தைப் பற்றிய கூற்றுகள், மேம்போக்கான சோதனைகள் ஆகியவைதாம் இன்றைய கவிதையின் பொதுச் சூத்திரங்களாக மாறியிருக்கின்றன என்ற சந்தேகம் கவிதை ஆர்வலனாக எனக்கு இருக்கிறது. கவிதை - குறிப்பாகத் தமிழ்க் கவிதை - அனுபவத்தின் மண்ணிலிருந்துதான் முளைவிடுகிறது என்று பிடிவாதமாக நம்புகிறேன். சங்க இலக்கியம் முதல் இன்றைய கவிதைவரை இதுவே கவிதையின் இயல்பு என்று நம்புகிறேன். வாழ்வின் ஏதோ ஒரு கணத்தைத் திறப்பதாகவே தமிழ்க் கவிதை இன்றுவரை இருந்திருக்கிறது.”

O
சமயவேல் கவிதைகள்

விக்ரமாதித்யன் மற்றும் கல்யாண்ஜி அவர்களின் மூலமாகவே, கவிஞர் சமயவேல் அவர்களின் கவிதைகள் எனக்கு அறிமுகமானது.

என் முதல் கவிதைத் தொகுப்பு அந்தரங்கத்திற்கு எழுதிய முன்னுரையில் விக்ரமாதித்யன் அவர்கள் குறிப்பிட்டிருந்த கவிஞர்கள் பட்டியலில் சமயவேல் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

அந்தரங்கம் தொகுப்பை வாசித்துவிட்டு தன் கருத்துகளை ஒரு மின்னஞ்சலில் அனுப்பி இருந்த கல்யாண்ஜி அவர்கள்,  சிலாகித்து சொல்லிய அவர் வார்த்தைகளை அப்படியே இங்கு தருகிறேன்:

“எளிமையாக, சிக்கலற்று எழுதுகிற கவிதைகளுக்கு, எவரும் பின்பற்றத் தகுதி உள்ள முன்னோடி காற்றின் பாடல், அரைக்கணத்தின் புத்தகங்களின் சமயவேல். சாதாரணப் பாடு பொருட்களிலிருந்து, சாதாரணச் சொற்களின் வழி, அசாதாரணக் கவிதாம்சங்களுக்கு எவ்வுகிற வீச்சும் விதமும் அவருடையது.”

# கல்யாண்ஜி

ஒவ்வொரு முறை ஊருக்கு விடுமுறையில் போகும்போதும், வாங்கி வந்து படிக்காமலே இருந்த புத்தக அடுக்கில் இருந்து தேடிப் பிடித்து, இன்றுவரை அவ்வப்போது, நான் படித்து வரும் ஒரு தொகுப்பு சமயவேல் அவர்களின் “அரைக்கணத்தின் புத்தகம்”. (அவரது முதல் இரண்டு தொகுப்புகளான "காற்றின் பாடல் மற்றும் அகாலம்" ஆகியவற்றில் இருந்த கவிதைகள் அனைத்தையும் தொகுத்து உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகம்)


01
இவ்வளவுக்குப் பிறகும்

இவ்வளவுக்குப் பிறகும்
நான் இந்த பூமியில்
இருக்கத்தான் விரும்புகிறேன்
 
அதுதான் என்
சாராம்சம்.

o

02
வாருங்கள்

உனக்கும் எனக்கும்
எனக்கும் அவனுக்கும்
இவனுக்கும் உனக்கும்
கடைசியில் ஒன்றுமில்லை
என ஆனது
 
அதனாலென்ன வாருங்கள்
டீ குடிக்கப் போகலாம்
என்றேன் நான்.

O

03
சந்தோசமாய்
 
தள்ளி விடப்பட்ட
டம்ளர்
அரைவட்டில்
உருள்கிறது
காற்று
தொடும்பொழுதெல்லாம்
சந்தோசமாய்.

0

04

நான் இன்று ஒரு ஆரஞ்சு மிட்டாய் சாப்பிட்டேன்
வெறும் 50 பைசாவுக்குள்
பல காலம்
பெரும் தித்திப்பைத் தேக்கி வைத்திருந்த பால்யம்
நாக்கின் அடியில்
மெதுமெதுவாய்க் கரைகிறது
அது எப்பேர்ப்பட்ட கசப்பையும் விழுங்க முடிந்தது
ஆழக் கிணற்றின் பளிங்கு நீரில் முக்குளித்து
மிதமான வெள்ளங்களில் நீச்சலடித்து
வேப்பமரக் கிளைகளில் ஊஞ்சலாடி
உளுந்தங்களிப் பெண்ணின் கன்னப் பூக்களைக் களவாடி
தனது ஆனந்தத்தை
அஞ்சு பைசாவுக்கு அஞ்சு ஆரஞ்சு மிட்டாய்களாக
வாங்க முடிந்த பால்யம் அது.

 (உயிர் எழுத்து, டிசம்பர் 2012)

O

05

பொட்டலம் பற்றிய யோசனைகள்

இரவின் அந்திமத்தில்
அதிகக் குளிரெடுத்து
போர்வையை மேலும்
இறுக்கிக் கொள்கிறபோது
உணர்கிறேன்
நான் ஒரு
துணிப்பொட்டலம் என்று.

மருத்துவச்சி ஏந்திக் காட்டிய
நிர்வாணப் பொட்டலம் கண்டு
வலியுடனும் குதூகலித்த
அம்மா
இன்றில்லை.

இது பற்றி மேலும்
யோசிக்க முடியாமல்
உருண்டு புரண்டு
தூங்கிப் போனேன்.

காலையில் எழுந்து குளித்து
ஷேவ் செய்து தலைவாரி
பவ்டர் பூசி
ஒரு சிறந்த உடைப் பொட்டலமாய்
தெருவில் நடந்தேன்.

O
நானும் எனது கவிதைகளும் ஒரு விடுதலை பெற்ற பறவையாக, உயிரைக் கையில் பிடித்தபடி பறந்து கொண்டிருக்கிறோம். பறக்கிற எல்லாவற்றின் மேலும் ஏவப்பட்ட அம்புகள் எங்களை நோக்கியும் வந்து கொண்டிருப்பது பற்றி எனக்குக் கவலை இல்லை. கவிதையின் சுதந்திரமும் அது தருகிற மகாசக்தியும் எல்லையற்ற பெருவெளியும் எனக்குப் போதும்.
# சமயவேல் (“மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும்” தொகுப்பு முன்னுரையில்)
o
சமயவேல் கவிதைத் தொகுப்புகள்:
1) அரைக்கணத்தின் புத்தகம் (2007 வரை எழுதிய கவிதைகளின் தொகுப்பு) - உயிர்மை பதிப்பகம்.
2) மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும் (2010) - ஆழி பதிப்பகம்
o

(நடப்போம்)


கவிதையின் கால் தடங்கள் - 1click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...